
இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதித்த தடை தவறானது என்று ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ தொடர்ந்த வழக்கில் பிரிட்டன் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இருப்பினும், அரசின் முடிவைப் பொறுத்தே தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும்.
38 பக்கங்கள் கொண்ட இந்தத் தீர்ப்பில் விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு ஈழத் தமிழர்களுக்கான விடிவாகப் பார்க்கப்படுகிறது.

எனினும் தடை நீக்கம் தொடர்பாக பிரிட்டன் அரசு எடுக்கும் முடிவினைப் பொறுத்தே தடை நீக்கம் தொடர்பான உறுதியான தகவல் தெரியவரும்.
பிரிட்டனில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நீதிமன்றத்தின் ஆங்கில தீர்ப்பு நகல்