வானத்தைப் பார், சந்திரனைப் பார்: புதிதாய்த் தோன்றிய மர்மத்தூணால் பரபரப்பு!

உலகம் சற்றுமுன்
Metal-pillar
Metal-pillar

தென்கிழக்கு துருக்கியில் ஒரு மர்மமான உலோகத்தூண் தோன்றியது குறித்து துருக்கி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அந்நாட்டின் சன்லியுர்பா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு விவசாயி இந்த மர்ம உலோத்தூணை பார்த்துள்ளார். சுமார் 10 அடி உயரம் கொண்ட இந்த மர்மத்தூண, கோபெக்லி டெப் என்ற யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த தூணில் பழைய துருக்கிய எழுத்துக்களைக் கொண்டு “வானத்தைப் பாருங்கள், சந்திரனைப் பாருங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் ஏலியின்கள் ஏதோ செய்தி அனுப்பியுள்ளதாக பதிவிட்டு வருகின்றனர்.

எனினும் இதுகுறித்து சி.சி.டி.வி காட்சிகள் மூலம் ஆய்வு செய்து வருவதாக துருக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த சில மாதங்களில் ஏராளமான நாடுகளில் இந்த மர்மத்தூண்கள் தோன்றியது, அவற்றில் பல காணாமல் போன நிலையில், தற்போது துருக்கியில் மீண்டும் இந்த மர்மத்தூண் தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.