கொரோனாவுடன் வந்து பங்கேற்ற இம்ரான்! விதியை மீறியதால் வலுக்கும் கண்டனம்!

Published:

IMRANKAN 2 1
IMRANKAN 2 1

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரதமர் இம்ரான் கான், அந்த நோயுடனேயே தனது அதிகாரிகளுடன் நேரடியாக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

68 வயதாகும் இம்ரானுக்கும், அவரது மனைவிக்கும் கடந்த சனிக்கிழமை கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஃபைசல் ஜாவித் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இம்ரான் நேரடியாகப் பங்கேற்ற காட்சி சமூக ஊடகங்களில் வெளியானது.

இதையடுத்து, கொரோனா விதிமுறைகளை பிரதமர் இம்ரான் கான் மீறியதாக எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த விவகாரத்தில் சமூக வலைதளப் பயன்பாட்டாளா்களும் இம்ரானுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img