December 5, 2025, 1:55 PM
26.9 C
Chennai

யூரோ 2021: எட்டாம் நாளில்.. ரொனால்டோ இருந்தும்… வென்ற ஜெர்மனி!

euro cup 2021
euro cup 2021

யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் 2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இன்று மூன்று ஆட்டங்கள் நடந்துள்ளன. இரண்டு குரூப் எஃப் போட்டிகள் மற்றும் ஒரு குரூப் இ போட்டி.
இன்றைய போட்டிகள்
(1) ஹங்கேரி மற்றும் பிரான்சுக்கு இடையிலான குரூப் எஃப் போட்டி புடாபெஸ்ட் நகரில் இந்திய நேரப்படி 19.06.2021 அன்று மாலை 18.30 மணிக்கு நடந்தது.
(2) குரூப் எஃப் விளையாட்டு போர்ச்சுகலுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் ம்யூனிச் நகரில் இந்திய நேரப்படி 18.06.2021 அன்று இரவு 21.30 மணிக்கு நடந்தது.
(3) செவில்லியில் ஸ்பெயினுக்கும் போலந்துக்கும் இடையிலான குரூப் இ போட்டி 20.06.2021 00.30 மணிக்கு நடந்தது.

ஹங்கேரி vs பிரான்சு
(ஆட்டம் சமன் 1-1)

சனிக்கிழமை புஸ்காஸ் அரங்கில், அரங்கு நிறந்த ரசிகர்களிடையே ஒரு பெரிய தோல்வியைத் தடுக்கவும், குரூப் Fஇல் ஹங்கேரியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருக்கவும், அன்டோயின் கிரேஸ்மேன் ஒரு கோலடித்து, உலக சாம்பியனான பிரான்ஸுக்கு இன்று ஒரு புள்ளியை வாங்கித் தந்தார்.

ஆரம்பகால வாய்ப்புகளை பிரான்ஸ் தவறவிட்டதால், அட்டிலா பியோலா ஹங்கேரிக்கு அரைநேர ஆட்டமுடிவில் முன்னிலை அளித்தார். ஆனால் கிரீஸ்மேன் 66ஆவது நிமிடத்தில் பிரான்ஸை நான்கு புள்ளிகளுக்கு நகர்த்தினார், அதே நேரத்தில் ஹங்கேரி ஆட்டத்தில் நீடிக்கும் தனது மெலிதான நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொண்டது. ஜெர்மனி, போர்ச்சுகல் போன்ற வலிமையான அணிகள் குரூப்பில் இருக்கும்போது இதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு.

COVID-19 தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து கால்பந்து ஆட்டத்தில் காணப்படாத, 65,000 பேர் கொண்ட, முக்கியமாக ஹங்கேரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமிருந்த மைதானத்தில் புள்ளிப்பட்டியலில் ஒரு புள்ளியை ஹங்கேரி பெற்றுள்ளது. அடுத்ததாக ஹங்கேரி புதன்கிழமை ம்யூனிச்சில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது, அதே நேரத்தில் போர்ச்சுகலும் பிரான்சும் புடாபெஸ்டில் விளையாடுகின்றன.

போர்ச்சுகல் Vs ஜெர்மனி
(ஜெர்மனி வெற்றி, 2-4)

portugal germany - 2025

மூன்று முறை ஐரோப்பிய சாம்பியனான ஜெர்மனி, தொடக்க ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியிருந்தபோதிலும் யூரோ 2020இல் தீவிர போட்டியாளர்களாக தங்கள் வருகையை இன்று அறிவித்தது, சனிக்கிழமை நடந்த குரூப் எஃப் போட்டியில் அதிக மதிப்பீடு செய்யப்பட்டிருந்த போர்ச்சுகலை 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வென்றது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ நடப்பு சாம்பியன்களான போர்ச்சுகலுக்கு 15ஆவது நிமிட்த்தில் ஒரு கோலடித்து முன்னிலை அளித்திருந்தார், ஆனால் முதல் பாதி ஆட்டம் முடிவடையும்போது ஜெர்மனி 2-1 என்ற கணக்கில் முன்னிருந்தது. போர்ச்சுகல்லின் ரூபன் டயஸ், ரபேல் குரேரோ ஆகியோரின் சொந்த கோல்களே இதற்குக் காரணமாகும்.

இரண்டாவது பாதியில் ஜேர்மனியர்கள் ‘கை ஹேவர்ட்ஸ்’, சுவாரஸ்யமான ‘ராபின் கோசென்ஸ்’ கோல்களைப் பெற்று, 4-1 என்ற கணக்கில் முன்னேறினர். ஆனால் போர்ச்சுகலின் ‘டியோகோ ஜோட்டா’ 67ஆவது நிமிட்த்தில் போர்ச்சுகலுக்காக ஒரு கோலை அடித்தார்.

இந்த வெற்றி, ஹங்கேரியை தங்கள் இறுதி ஆட்டத்தில் எதிர்கொள்ளும் ஜெர்மனியை மூன்று புள்ளிகளுடன் குழுவில் இரண்டாவது இடத்திற்கு நகர்த்துகிறது, குரூப்பில் முதலிடம் வகிக்கும் பிரான்சுக்கு பின்னால் போர்த்துகீசியர்களுடன் புள்ளிகள் சமன் நிலையில் உள்ளது. முன்னதாக சனிக்கிழமை பிரான்சுடன் ஹங்கேரி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றது.

ஜெர்மனி, பிரெஞ்சு அணியிடம் தோல்வியுற்றதில் இருந்து, இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே நம்பிக்கையுடன் தொடங்கியது. ஆட்டத்தில் ஐந்தாவது நிமிடத்தில் கோசன்ஸ் மூலம் முன்னிலை பெற்றதாக நினைத்தார்கள். ஆனால் செர்ஜ் க்னாப்ரி ஒரு ஆப்சைட் நிலையில் இருப்பதாக VAR தீர்ப்பளித்தார். எனவே கோல் மறுக்கப்பட்டது.

ஸ்பெயின் Vs போலந்து
(போட்டி 1-1 என சமநிலை)

spain vs poland - 2025

ஸ்பெயினுடனான 1-1 என்ற கோல் கணக்கில் இரண்டாவது பாதியில் சமநிலையை அடைய ஒரு கோலை அடித்ததன் மூலம் யூரோ 2020இல் தொடர்ந்து ஆட இன்னமும் போலந்திற்கு வாய்ப்புள்ளது. ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி அடித்த கோல் இதற்கு உதவியது.

இதற்கு முன்னர் முதல் பாதில் ஆல்வாரோ மொராட்டா 25ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்ததன் மூலம் ஸ்பெயினை முன்னிலைப்படுத்திநார். அவர் நீண்ட நாட்களாக கோல் அடிக்காத தனது ஸ்கோரிங் வறட்சியை இதன் மூலம் முடித்தார்.

இது அவரது ஒரு முக்கிய போட்டியில் அடிக்கும் மூன்றாவது கோலாகும். லெவாண்டோவ்ஸ்கியின் கோலுக்குப் பிறகு ஸ்பெயின் ஸ்ட்ரைக்கர் ஜெரார்ட் மோரேனோ ஒரு பெனால்டி கிக் தவறவிட்டார், பின்னர் மொராட்டா ஒரு ‘ஓப்பன் நெட்’ எனப்படும் சுலபமான கோலைத் தவறவிட்டார்.

இதன் விளைவாக வெள்ளிக்கிழமை நடந்த ஆட்டத்தில் ஸ்லோவாக்கியாவை வென்ற பிறகு ஸ்வீடன் நான்கு புள்ளிகளுடன் குரூப் Eஇல் முதலிடத்தில் உள்ளது. ஸ்லோவாக்கியா மூன்று புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, ஸ்பெயினுக்கு இரண்டு புள்ளிகள் உள்ளன. ஒரு புள்ளியுடன் குழுவில் கடைசியாக இருந்தபோதிலும் போலந்துக்கு யூரோ 2020 இல் முன்னேற வாய்ப்பு உள்ளது.

போலந்து மிட்பீல்டர் காக்பர் கோஸ்லோவ்ஸ்கி ஐரோப்பிய சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஒரு மாற்று வீரராக இறங்கியபோது இந்தப் போட்டியில் ஆடும் மிக இளைய வீரர் ஆனார். 17 வயதான கோஸ்லோவ்ஸ்கி இரண்டாவது பாதியில் லெவாண்டோவ்ஸ்கி கோல் அடித்ததற்கு முன்னதாகவே களத்தில் இரங்கினார்.

கோஸ்லோவ்ஸ்கி அக்டோபர் 16, 2003 இல் பிறந்தவர். இங்கிலாந்து மிட்பீல்டர் ஜூட் பெல்லிங்ஹாம் ஆறு நாட்களுக்கு முன்னர் இந்த மிக இளைய வீரர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். ஆனால் அது ஆறு நாட்கள் மட்டுமே நிலைத்திருந்தது. பெல்லிங்ஹாம் ஜூன் 29, 2003இல் பிறந்தவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories