
விபத்துகள் எப்போது எவ்வாறு எங்கிருந்து வந்தது சேரும் என்று யாராலும் கூற முடியாது. சிலர் இதனை துரதிர்ஷ்டம் என்பர்.. சிலர் விதி என்பர்.. உண்மைதான். சில சம்பவங்களைப் பார்த்தால் விதியை நம்பத்தான் வேண்டியிருக்கிறது. அதற்கு இந்த வீடியோவே ஒரு உதாரணம்.
சந்தோஷமாக பார்ட்டி கொண்டாடி உற்சாகத்தோடு நாளை கழித்துக் கொண்டிருந்த போது அவர்கள் நின்றிருந்த பால்கனி ஒரேடியாக இடிந்து விழுந்தது. அதனால் பலருக்கும் தீவிரமான காயங்கள் ஏற்பட்டன. தற்போது இந்த பயங்கரமான வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிசிடிவியில் ரெக்கார்ட் ஆன இந்த காட்சியை சமூகவலைதளத்தில் பார்த்த நெட்டிசன்கள் வியந்து போகிறார்கள்.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் புகழ்பெற்ற மாலிபூ பீச் அருகில் ஒரு வீட்டில் சனிக்கிழமை அன்று சிலர் பார்ட்டி நடத்தினார்கள். அனைவரும் உற்சாகமாக பார்ட்டியை ரசித்தார்கள். பால்கனியில் நின்று கொண்டு கடலின் அழகை கண்டு களித்தார்கள்.
அதற்குள் இருந்தாற்போலிருந்து அவர்கள் நின்றிருந்த பால்கனி இடிந்து விழுந்தது. நான்கு பேருக்கு தீவிரமான காயங்கள் ஏற்பட்டன. இருவரின் நிலை அபாயகரமாக உள்ளது. ஐந்து பேர் சிறு காயங்களுடன் தப்பினார்கள். ஆனால் இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் இறக்கவில்லை. இந்த சம்பவம் நடந்தபோது அங்கு 15 பேருக்கு மேலாக நின்றிருப்பார்கள் என்று தெரிகிறது. நேராக பார்த்த சாட்சிகள் மூலம் பார்ட்டி நடத்தியபோது பால்கனி கிராக் அடித்தது என்றும் உடனே 15 அடி வரை கீழே இடிந்துவிழுந்தது என்றும் கூறப்படுகிறது.
“நாங்கள் பால்கனி பிளவுபட்ட சத்தத்தைக் கேட்டோம். என் நண்பர்கள் பதினைந்து அடிகள் கீழே விழுந்ததை எங்கள் கண்களால் பார்த்தோம். பால்கனி திடீரென்று கீழே விழுந்தது. இது மிகவும் பயங்கரமாக இருந்தது. நினைத்தாலே பயம் ஏற்படுகிறது” என்று நேரடியாக பார்த்த சாட்சிகளில் ஒருவர் தெரிவித்தார்.
இது மிகவும் கொடுமையானது என்றும் எவ்வாறு நடந்ததோ தெரியவில்லை என்றும் கூறினார்கள்.
அந்த வீட்டை வீகெண்ட் வார இறுதி விடுமுறைக்காக ஒரு பெண் வாடகைக்கு எடுத்திருந்தார். 6 பேர் மாத்திரமே நிற்கக்கூடிய அந்த பால்கனியில் பார்ட்டி நடந்த போது 30 பேருக்கு மேலாக இருந்ததாக கூறப்படுகிறது. பார்ட்டி நடத்த வேண்டாம் என்று வீட்டு உரிமையாளர் முன்பாகவே எச்சரித்தாலும் அவர்கள் அதை காதில் வாங்கவில்லை. அதிக விருந்தினர்கள் அங்கு வரக்கூடாது என்று வீட்டு உரிமையாளர் பலமுறை போன் செய்து எச்சரித்துள்ளார். குடியிருப்பவர்கள் கேட்கவில்லை. பின்னர் 15 நிமிடங்களுக்குள் இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது. அளவுக்கதிகமன மனிதர்கள் பால்கனிக்கு வந்து நின்றதால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள்.
தீயணைப்பு படையினர் தற்போது அந்த வீட்டை குடியிருப்புக்கு லாயக்கற்றது என்பதாக அறிவித்துள்ளார்கள்.
இதோ இந்த வீடியோ…