
ஆசஸ் நிறுவனம் அதன் நுகர்வோர் மின்னணுப் பிரிவில் பல புதிய சாதனங்களை அறிமுகம் செய்து வலுப்படுத்தி வருகிறது. பல புதுமையான சாதனங்களை அறிமுகப்படுத்தும் அதே வேளையில், போட்டி விலையில் சாதனங்களை அறிமுகம் செய்வதிலும் தைவானை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனம் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.
ஆசஸ் நிறுவனத்தின் கேமிங் ஸ்மார்ட்போன்கள் கேமர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து இப்போது ட்விட்டர் ஆசஸ் ROG 5s என்ற புதிய சாதனத்தை அறிமுகம் செய்ய இந்நிறுவனம் தயாராகி வரும் வேளையில் ட்விட்டரில் இந்த போன் ட்ரெண்டாகி வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும், விலை என்னவாக இருக்கும், என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கும் என்பது குறித்து வெளியான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆசஸ் ROG 5s விவரக்குறிப்புகள் (எதிர்பார்ப்புகள்)
ஆசஸ் ROG 5s பெரும்பாலும் ஸ்னாப்டிராகன் 888+ செயலி உடன் வரும் என்று ஊகிக்கப்படுகிறது.
இது கேமிங் ஸ்மார்ட்போன் என்பதால் 144Hz OLED டிஸ்ப்ளேவுடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் பயனர்களுக்கு புதிய கேமிங் அனுபவத்தை வழங்கக்கூடியதாக இருக்கும்.
அதிக refresh rate இருப்பதன் மூலம், கேமிங் போட்டிகளின் போது சிறப்பாக விளையாட உதவியாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி மற்றும் 18 ஜிபி RAM உடன், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஆன்-டிவைஸ் ஸ்டோரேஜுடன் இரண்டு ஸ்டோரேஜ் மாடல்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசஸ் ROG 5s போனில் 6,000 mAh பேட்டரியுடன், 65W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்டுகிறது.
அதோடு, இதில் கூலிங் ஃபேன்ஸ், பின் பேனலில் RGB லைட்டிங் மற்றும் இது போன்ற பல கேமிங்-மையான அம்சங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசஸ் ROG 5s வெளியீட்டு தேதி
ஆசஸ் ROG 5s கேமிங் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 16, 2021 அன்று வெளியாகும் என்று வதந்திகள் பரவுகிறது, முதலில் சீனாவில் வெளியாகும் என்றும் அதன் பிறகு உலகளாவிய வெளியீடு நிகழும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆசஸ் ROG 5s விவரக்குறிப்பைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன் பிரீமியம் பிரிவிற்கான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ASUS ROG 5S
— TechTipster (@TechTipster_) August 10, 2021
▪️144Hz OLED display
▪️Snapdragon 888+ SoC
▪️16GB / 18GB of RAM
▪️256GB / 512GB of internal storage
▪️6,000mAh battery
▪️65W fast-charger#ASUSROG5S #ASUS #ROG5S #ASUSROGPhone #Snapdragon888Plus pic.twitter.com/iwJgfUMMQn