- செல்வநாயகம்
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நேற்று துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ஜனாதிபதி பைடன் ஆகியோரை வாஷிங்டனில் சந்தித்தார்.
அதன் பிறகு நான்கு நாடுகள் கூட்டமைப்பான க்வாட் (QUAD – ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா) கூட்டத்தில் நான்கு நாட்டு தலைவர்களும் பங்கெடுத்து பேசினர்.
பயங்கரவாதம், ஆஃப்கானிஸ்தான், கோவிட் தடுப்பு மருந்து என பல விஷயங்கள் பற்றி பேசியிருக்கிறார்கள்.
வாஷிங்டனில் இருந்த போது – க்வால்காம், அடோபி, ஃபர்ஸ்ட் சோலார், ஜெனரல் அடாமிக்ஸ், ப்ளாக்ஸ்டோன் உள்ளிட்ட பல நிறுவன தலைவர்களை சந்தித்து பேசினார் – இந்தியாவில் தொழில் தொடங்க.
வாஷிங்டன் விஜயத்தை முடித்துக் கொண்டு, நேற்றிரவு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கெடுக்க நியூயார்க் புறப்பட்டார் பிரதமர்.
பராக் ஹுசைன் ஒபாமா போல பைடன் / ஹாரிஸ் இந்தியாவுக்கு / ‘பாசிச மோதிக்கு’ அறிவுரை ஏதும் வழங்காதது சோனியாவுக்கு பெருத்த ஏமாற்றம். அதெல்லாம் அந்தக்காலம் சோனியா.
குறிப்பு: பைடன் மோதி ஜியை கட்டித்தழுவ (hug) வந்தார். ஆனால் மோதி ஜி அதை செய்யவில்லை. ஒரு கும்பிடு போட்டு முடித்துக் கொண்டார். டிரம்ப் – மோதி உறவு வேறு லெவல்.