பாட்டி வீட்டு மரத்தின் பழத்தை உண்ட குழந்தைகள் உயிரிழப்பு!

Published:

bro sis
bro sis

குழந்தைகள் 2 பேர் தங்கள் பாட்டி வீட்டின் தோட்டத்தில் இருந்த பழத்தை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியா நாட்டின் Montecitos என்ற கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 5 வயதுள்ள ஜோஃப்ரான் சாயா மற்றும் அவரது சகோதரி அமிரா சாயா(3) ஆகிய இருவரும் ஆப்பிள் சாப்பிடுவதாக நினைத்துக் கொண்டு குறித்த பழங்களை சாப்பிட்டுள்ளனர்.

அப்போது சிறுவர்கள் 2 பேரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு வாந்தி மற்றும் வலிப்பு நோயால் சிரமப்பட தொடங்கினர். இவ்வாறு சிறுவர்கள் சாப்பிட்ட அந்த பழமானது உள்ளூரில் bola de toro என அறியப்படுகிறது.

இதில் விஷத்தன்மை கொண்ட இந்த மரமானது 10 அடி உயரம் வரையிலும் வளரும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் சிறுவர்கள் 2 பேரையும் அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து 2 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி சிறுவர்கள் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இவர்களில் சிறுவன் 6 மற்றும் சிறுமி 4 பழங்களை தின்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் வெனிசுலாவில் சேர்ந்த குடும்பம் என்பதால் மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெற முடியாமல் போனது.

மேலும் சிறுவர்களை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தாமதம் நிலவியதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் சிறுமியின் நிலை ஒரு கட்டத்தில் கவலைக்கிடமாக மாறி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் இறுதியில் சிறுமி அங்கேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் குழந்தைகளின் பெற்றோர் கொலம்பியாவின் ஓம்புட்ஸ்மேன் அலுவலகத்தில் உதவி பெற முடிவு செய்தனர்.

இதன் காரணமாக சிறுவனை உயர் சிகிச்சைக்கு வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியும் என அவர்கள் நம்பியுள்ளனர்.

இதனைதொடர்ந்து ஓம்புட்ஸ்மேன் அலுவலகம் உடனடியாக அனுமதி கொடுத்ததும், அவர்கள் Cucuta நகரில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே சிறுவன் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு விஷத்தன்மை கொண்ட பழம் சாப்பிட்டு உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் வெனிசுலாவில் இருந்து கொலம்பியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இந்த குடும்பத்தினர் சிறுவர்களின் பாட்டி குடியிருப்பிலேயே வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில் வீட்டு தோட்டத்தில் அந்த மரத்தை வளர்ப்பவர்கள் உடனே அதை வெட்டி வீச வேண்டும் என்று நகர நிர்வாகம் மற்றும் போலீஸ் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related articles

Recent articles

spot_img