பிரேசில் நாட்டு பாடகி மரிலியா மென்டோன்கா அவர்கள் பயணித்த சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் குறித்து வெளியான அறிக்கையில் மரிலியா மென்டோன்காவின், அவரது தயாரிப்பாளரான ஹென்ரிக் ரிபேரோ, உதவியாளர் அபிசிலி சில்வீரா டயஸ் ஃபில்ஹோ மற்றும் விமானத்தின் பைலட் மற்றும் துணை விமானி ஆகியோரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
மரிலியா மென்டோன்கா பிரேசிலிய நாட்டுப்புற இசை “செர்டனேஜோ” இன் ஐகானாக புகழ் பெற்றார், இந்த பிரிவில் ஆல்பத்திற்காக 2019 “லத்தீன் கிராமி” விருதையும் வென்றுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை விமானத்தில் ஏறும் வீடியோவையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
26 வயதான மென்டோன்கா ஒரு இசை நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மத்திய மேற்கு நகரமான கோயானியாவிலிருந்து கராட்டிங்காவுக்குச் செல்லும் விமானம் புறப்பட்டது.
விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது, ஆனால் அரசு நடத்தும் மின்சார நிறுவனமான செமிக் தனது அறிக்கையில், விமானம் தரையில் விழுவதற்கு முன்பு நிறுவனத்திற்கு சொந்தமான மின்சார விநியோக பாதையில் மோதியதாக தெரிவித்துள்ளது.
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ட்விட்டரில், இந்த செய்தியால் நாடு முழுவதும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், மெண்டோன்கா தனது தலைமுறையின் சிறந்த கலைஞர்களில் ஒருவர் என்று கூறி தனது இரங்கல் செய்தியை பதிவு செய்துள்ளார்.