பூனை ஒன்று அழகாக 1 , 2 , 3 சொல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
கிளிகள் பேசும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம்.
மனிதர்கள் சொல்வதை கிளிகள் அப்படியே திருப்பி சொல்லுவதையும்கூட நாம் பார்த்திருப்போம்.
ஆனால் பூனை ஒன்று மனிதர்கள் சொல்வதை அப்படியே திருப்பி சொல்லும் வீடியோ பார்ப்பதற்கே ஆச்சரியமாக உள்ளது.
குறிப்பிட்ட வீடியோ காட்சியில், பெண் ஒருவர் பூனையிடம் 1 , 2 , 3 சொல்லி கொடுக்கிறார். அதனை கேட்டு, அந்த பூனை அப்படியே திருப்பி சொல்கிறது.
அதிலும் அந்த பூனை 10 சொல்லும் அழகே தனிதான். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.