கொழும்பு; இலங்கையில் அதிபர் ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசியல் சட்டத் திருத்தத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத் திருத்தத்தின்படி, * அதிகாரமிக்க அதிபர் ஆட்சிக்கு பதிலாக நாடாளுமன்றத்திற்கு கூட்டுப் பொறுப்புள்ள ஆட்சிமுறை அமலுக்கு வரும். * அதிபரின் பதவிக் காலமும் 6 வருடத்தில் இருந்து 5 வருடமாகக் குறைக்கப்படும். * அதிபர் பதவியில் ஒருவர் 2 முறை மட்டுமே இருக்க முடியும் என்ற பழைய விதி மீண்டும் அமல் செய்யப் படும். * மக்கள் பிரதிநிதிகள் வாக்கு விகிதாச்சார அடிப்படையில் நியமிக்கப்படுவதற்கு பதிலாக இனி நேரடியாக மக்களால் வாக்களித்து தேர்வு செய்யப்படுவர். அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இந்த மாற்றங்கள் அடங்கிய சட்டத் திருத்தம் அனைத்துக் கட்சியின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படும் என இலங்கை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த சட்டத் திருத்தத்தை எதிர்க்கப் போவதாக முன்னாள் அதிபர் ராஜபட்சவின் இலங்கை சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கையில் அதிபர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: அமைச்சரவை ஒப்புதலுக்கு ராஜபட்ச கட்சி எதிர்ப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari