ஏப்ரல் 21, 2021, 7:45 மணி புதன்கிழமை
More

  வெளிசாட்சிகளை விட… மனசாட்சி மகத்துவமானது!

  சாட்சிகளை கொண்டு நிரூபிக்காமல், மன சாட்சியோடு நீ வாழ்ந்தால்…. வெற்றி நிச்சயம்!

  thirupparankundram murugan
  thirupparankundram murugan

  இனிய ஆடிகிருத்திகை வணக்கங்கள் வாழ்த்துக்கள்….

  சிந்திக்க சில நொடிகள்:
  தண்ணீர் அமைதியாயிருக்கும் போது தூசிகள் அடியில் தானாகவே தங்கி விடும்.. வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் போது அமைதியாய் இருங்கள் தானாகவே அடங்கி விடும்…

  குறை இல்லாத மனிதன் இல்லை… அதை, குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..!!

  கடவுள் சிலவற்றை தாமதமாக கொடுத்தாலும்… தரமானதாக கொடுப்பார்..சோர்ந்து போகாதீர்..!!
  எதற்கும் துணிவில்லாதவன்… எதையும் எதிர்பார்க்க முடியாது..!!

  உண்மையில் பூனை குறுக்கே போனதை விட… நாய் குறுக்கே போனதால் கீழே விழுந்தவர்களே அதிகம்..!!*

  திருமணத்திற்கு முன் தாயும், திருமணத்திற்கு பின் மனைவியும், சரியாக அமைந்த ஒவ்வொரு ஆணும் மிகவும் அதிஷ்டசாலி தான்…*

  ஏமாற்றங்களை யாரும் எதிர்பார்ப்பதில்லை…எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றங்களாகின்றன.

  ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு இருட்டு கூட அழகுதான்.
  சிரிக்கத் தெரிந்தவர்களுக்கு சோகம் கூட சுகம் தான்.

  அருகில் இருப்பதனால் ‘அன்பு’ அதிகரிப்பதும் இல்லை…தொலைவில் இருப்பதனால் ‘அன்பு’ குறைவதுமில்லை.

  உன் கால்கள் வீங்கி நடக்க முடியாமல் போனாலும் கைகளை கொண்டு முன்னேறு, உலகம் உன் வெற்றியை பார்த்த பின் தான் உன் கஷ்டத்தை பார்க்கும்.

  வீசப்படும் கல்லால், குளம் சில நிமிடங்கள் கலங்கும்… ஆனால் வீசப்பட்ட கல்லோ மூழ்கி விடும்.
  பேசப்படும் வெற்று வார்தைகளால், வெற்றி வரும். தூற்றப்பட்ட வார்த்தைகள், போற்ற துணை வரும்.

  சாட்சிகளை கொண்டு நிரூபிக்காமல், மன சாட்சியோடு நீ வாழ்ந்தால்…. வெற்றி நிச்சயம்!

  • கே.ஜி.ராமலிங்கம்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »