பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை வெளியிட்ட நாசா..

769786 6 - 2026

உலகம் இதுவரை கண்டிராத பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை அமெரிக்காவின் விண்வெளி மையம் நாசா வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக தொலைநோக்கி ஒன்றை உருவாக்கியுள்ளது. ‘ஜேம்ஸ் வெப்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தொலை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. மொத்தம் 5 ராக்கெட்டுகள் உதவியுடன் விண்ணில் இந்த தொலைநோக்கி ஏவப்பட்டது.

இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. பூமியில் இருந்து 8 ஆயிரத்து 500 ஓளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கரீனா நிபுலா பிரபஞ்சம், 1,150 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஸ்பெக்டர்ம் பிரபஞ்சம், 2 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சதர்ன் ரிங் நிபுலா பிரபஞ்சம், 290 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஸ்டீபன்ஸ் குவாண்ட் எனப்படும் 5 விண்மீன்களின் தொகுப்பு ஆகிய பிரபஞ்சத்தின் புகைப்படங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.

769787 1 - 2026
769791 7 - 2026

இந்நிலையில், கரீனா நிபுலா என்ற பிரபஞ்சத்தில் மலை முகடு போன்ற பகுதியில் நட்சத்திரங்கள் ஒளிரும் நிகழ்வை ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி புகைப்படமாக எடுத்து அனுப்பியுள்ளது.

கரீனா நிபுலாவின் என்.ஜி.சி. 3324 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பகுதியில் இருந்தே நட்சத்திரங்கள் உருவாகலாம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் சிறிய முதல் பெரிய நட்சத்திரங்கள் ஒளிர்வதை தொலைநோக்கி புகைப்படமாக எடுத்துள்ளது. கரீனா நிபுலா பிரபஞ்சம் வாயு, துகள்கள் நிரம்பியதாகவும் அந்த மலை முகடு போன்ற பகுதியில் இருந்து நட்சத்திரம் உருவாகுவதாகவும் நாசா தெரிவித்துள்ளது. நாசா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் பிரபஞ்சத்தின் பல்வேறு மர்மங்களை கலைக்கலாம் என்று நம்பப்படுகிறது.

769784 11 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories