இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டி20 ஆட்டம் – டர்பன் –08.11.2024
இந்திய அணி அபார வெற்றி
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இந்திய அணி(20 ஓவர்களிக்கு 8 விக்கட் இழப்பிற்கு 202, சஞ்சு சாம்சன் 107, திலக் வர்மா 33, சூர்யகுமார்யாதவ் 21, ஜெரால்ட் கோயட்சி 3/37) தென் ஆப்பிரிக்க அணியை (17.5 ஓவர்களில் 141, கிளாசன்25, கோயட்சி 23, ரிக்கிள்டன் 21, வருண்3/25, ரவி பிஷ்னோய் 3/28, ஆவேஷ் கான் 2/28, அர்ஷதீப் சிங் 1/25) 61 ரன்கள் வித்தியாசத்தில்வென்றது.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் நான்குடி20 ஆட்டங்கள் கொண்ட தொடரை ஆடுவதற்காகச் சென்றிருக்கிறது. அதில் முதல் ஆட்டம் இன்றுடர்பன் நகரைல் நடந்தது. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் அணித்தலைவர். பூவாதலையா வென்றதென் ஆப்பிரிக்க அணித்தலைவர் மர்க்ரம் இந்திய அணியை மட்டையாடச் சொன்னார்.
இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக்ஷர்மா (8 பந்துகளில் 7 ரன்) நாலாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு முனையில் சஞ்சுசாம்சன் அருமையாக ஆடிக்கொண்டிருந்தார். சூர்யகுமார் யாதவ் (17 பந்துகளில்21 ரன்) திலக் வர்மா (18 பந்துகளில் 33 ரன்) சாம்சனுக்குத் துணை நின்றனர். இறுதியில்15.4 ஓவரில் சஞ்சு சாம்சன் (50 பந்துகளில் 107 ரன், 7 ஃபோர், 10 சிக்சர்) ஆட்டமிழந்தார்.
ஹார்திக் பாண்ட்யா (6 பந்துகளில் 2 ரன்) இன்று சோபிக்கவில்லை. இதன் பின்னர் வந்த வீரர்களான ரிங்கு சிங்(10 பந்துகளில் 11 ரன்), அக்சர் படேல் (7 பந்துகளில் 7 ரன்), அர்ஷ்தீப் சிங்(4 பந்துகளில் 5 ரன்), ரவி பிஷ்னோய் (3 பந்துகளில் 1 ரன்) ஆகியோர் சொற்ப ரன்களேசேர்த்தனர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கட் இழப்பிற்கு 202 ரன்கள் சேர்த்தது.
இதற்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணி ஆடவந்தபோதுஅதன் தொடக்கம் சரியாக அமையவில்லை. அணித்தலைவர் மர்கரம் (4 பந்துகளில் 8 ரன்)முதல் ஓவரில் ஆட்டமிழந்தார். ஸ்டப்ஸ் (11 பந்துகளில் 11 ரன்) மற்றும் ரிக்கிள்டன்(11 பந்துகளில் 21 ரன்) இருவரும் வேகமாக ரன் சேர்த்தபோதும் நாலாவது ஓவரிலும் ஆறாவதுஓவரிலும் முறையே ஆட்டமிழந்தனர்.
ஆறாவது ஓவரில் வருண் சக்ரவர்த்தி பந்து வீசவந்தார். அந்த ஓவரில் இரண்டாவது பந்தில் அவர் ரிக்கிள்டனை ஆட்டமிழக்கச்செய்தார். வருணும்ரவி பிஷ்னோயும் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினர்.
12ஆவது ஓவரில் வருண், கிளாசன்மற்றும் டேவிட் மில்லர் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார். 13ஆவது ஓவரில் பிஷ்னோய்பேட்ரிக் குருகரையும் சிம்லேனையும் அவுட் ஆக்கினார். அதன் பின்னர்17.5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 141 ரன் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
ஆட்ட நாயகனாக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டார்.