பிரிட்டனில் யூதர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவிருப்பதாக அந்த நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார். வாஷிங்டனில், பிரிட்டிஷ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்… பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகும், பல்வேறு அச்சுறுத்தல்களின் அடிப்படையிலும், யூதர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், தடைகளற்ற, வெளிப்படைத் தன்மை வாய்ந்த சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்களை அரசால் மட்டுமே முற்றிலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. எனவே, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றார்.
பிரிட்டனில் யூதர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளது: பிரதமர் கேமரூன்
Published:

