சாண்டியாகோ: சிலி நாட்டில் 54 ஆண்டுகளுக்கு முன் கால்பந்து வீரர்களுடன் மாயமான விமானத்தின் சிதறிய பாகங்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டில் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ந் தேதி லான் சிலி டக்ளஸ் டிசி-3 என்ற விமானம் மாயமானது. இந்த விமானத்தில் சிலி நாட்டு கால்பந்தாட்ட அணியின் வீரர்கள், நடுவர்கள் உட்பட 24 பேர் பயணம் செய்தனர். ஆனால் இந்த விமானம் என்ன ஆனது என்பது குறித்து எதுவும் தெரியாமல் இருந்தது. இதை அடுத்து, இந்த விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது சான்டியாகோவில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள மௌலே பகுதியில் 54 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன அந்த விமானத்தின் பாகங்களை மலையேறும் வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். அப்பகுதியில் ஏராளமான மனித எலும்புகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
54 ஆண்டுக்கு முன் கால்பந்து வீரர்களுடன் மாயமான சிலி விமானத்தின் சிதறிய பாகங்கள் கண்டெடுப்பு
Popular Categories


