December 5, 2025, 9:12 PM
26.6 C
Chennai

ஃபேஸ்புக் தகவல் திருட்டு: மூடப்பட்டது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா

cambridgeanalytica1 - 2025ஃபேஸ்புக்கிலிருந்து பயனாளர்களின் தகவல்களைத் திருடிய கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் திடீரென மூடப்பட்டுள்ளது. அதன் தாய் நிறுவனமான பிரிட்டனைச் சேர்ந்த எஸ்.சி.எல். எலெக்சன்ஸ் என்ற நிறுவனமும் மூடப்பட்டு விட்டது. தங்கள் ஏராளமான வாடிக்கையாளர்களையும் வர்த்தகத்தையும் இழந்து விட்டதாக அந்த நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.

2016 அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து பெரும் சர்ச்சை வெடித்தது. அமெரிக்க தேர்தலில் டொனால்டு ட்ரம்பிற்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பிரசாரத்தை மேற்கொள்ள பெருந்தொகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிரிட்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் பணியமர்த்தப்பட்டது. ஃபேஸ்புக், ட்வீட்டர் போன்ற சமூகவலைதளங்களில், ட்ரம்ப் குறித்த தகவல்களை பரப்புவதற்காகவும், அவருக்கு ஆதரவான கருத்துக்களை கொண்டு சேர்க்கவும் பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டது.

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டொனால்ட் ட்ரம்புக்காக பணியாற்றிய கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற இணைய நிறுவனம், சுமார் 5 கோடி அமெரிக்கர்களின் பேஸ்புக் விவரங்களை திருடியதாக செய்தி வெளியாகியது. சேனல் 4 செய்தி நிறுவனம் நடத்திய கள ஆய்வில் இந்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது.

இந்நிறுவனம் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக நடத்தப்பட்ட தேர்தலிலும் தன்னுடைய கைவரிசையை காட்டியதாக தெரிகிறது. விதிமுறைகளை மீறி தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக கூறி கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடனான வர்த்தக உறவை பேஸ்புக் நிறுவனம் துண்டித்துள்ளது.

இந்நிலையில், ஃபேஸ்புக்கை டெலிட் செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டதாக வாட்ஸ் ஆப் செயலியின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன் தெரிவித்திருந்தார். கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் நைஜீரியா, கென்யா, செக் குடியரசு மற்றும் அர்ஜெண்டினா, இந்தியா என உலக முழுவதும் நடைபெற்ற 200க்கும் அதிகமான தேர்தல்களில் இந்நிறுவனம் பணியாற்றி உள்ளதாக தெரிவித்து உள்ளது.

கடந்த 2010 ஆண்டு பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் இந்திய அரசியல் கட்சி அல்லது கட்சிகளுக்காக பணியாற்றியதாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா அதனுடைய இணையதளத்தில் தெரிவித்து உள்ளது. தேர்தலில் பாஜக கூட்டணியுடன் இணைந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெற்றிப்பெற்றது. இவ்விவகாரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியது

இந்திய தேர்தல்களிலும் தன்னுடைய உத்திகளை கேக்பிரிட்ஜ் அனாலிட்டிகா பயன்பத்தியதா என்ற மில்லியன் டாலர் கேள்வியை அனைவரது மத்தியிலும் எழ செய்து உள்ளது. இந்திய அரசியல் கட்சிகளுக்கு சார்பாக அந்நிறுவனம் பயன்படுத்தியதா என்பது உறுதிசெய்யப்படாத நிலையில் உள்ளது.

அந்நிறுவனம் லண்டனில் உள்ள எஸ்சிஎல் குரூப்புடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்து உள்ளது. ஓபிஐ நிறுவனத்தின் இணையதளத்தில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தங்களுடைய வாடிக்கையாளர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார்.

அனைவரின் கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம், தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்வதையும் இந்திய அரசு மதிக்கிறது. ஆனால், தேர்தல்களில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூக்கை நுழைக்க நினைத்தால் அதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் ஐடி அணியின் தலைவர் திவ்யா, இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவின் சேவையை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை என்றும், பாஜகவிற்கு சேவை செய்ததாகத்தான் கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவின் இணைய தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் திவ்யா.

இதேபோல காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலாவும் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்துக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். பாஜக போலியான செய்திகள் மற்றும் போலியான அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். இதுவும் அதுபோல தான் தோன்றுகின்றது. போலியான செய்தியாளர்கள் சந்திப்பு, போலியான அறிக்கைகள் போலியான நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றை பாஜக தினந்தோறும் நடத்தி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories