கடந்த சில ஆண்டுகளாக திரையுலகம் பேயின் பிடியில் சிக்கியிருந்த நிலையில் தற்போது பேயின் பிடியில் இருந்து விடுபட்டு விலங்குகளை நோக்கி செல்கிறது.
சுமார் பத்தாண்டுகளாக தமிழ் திரையுலகம் உள்பட அனைத்து திரையுலகினர்களும் பேய்ப்படங்களில் கவனம் செலுத்தினர். தற்போது பேயின் மோகம் குறைந்து வரும் நிலையில் விலங்குகள் படத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
விலங்குகளை வைத்து படமெடுத்த சாண்டோ சின்னப்பா தேவர், ராமநாராயணன் பாணியில் வித்தியாசமாக தற்போதைய இயக்குனர்கள் சிந்தித்து வருகின்றானர். நாயை வைத்து காலா, நாய்கள் ஜாக்கிரதை போன்ற படங்களும், ஜீவா நடிக்கும் படத்தில் சிம்பன்சி குரங்கை வைத்தும், சரத்குமாரின் பாம்பன் படம் மற்றும் ஜெய் நடிக்கும் நீயா 2 படம் பாம்புகளை வைத்தும் படங்கள் தயாரிக்கப்படுகிறது. மேலும் ஒட்டகம், சிறுத்தை ஆகிய விலங்குகளை வைத்தும் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன