அமெரிக்க அதிபர் டிரம்ப்- வடகொரிய அதிபர் கிம் ஜ்ங் உன் இடையேயான சந்திப்பு அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கடந்த வார இறுதியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இருதரப்பு சந்திப்பு குறித்து தேதி மற்றும் இடம் ஆகியவை முடிவு செய்யப்பட்டு விட்டது என்றும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். வராலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பு ஜூன் மாதத்தில் நிடபெரும் என்று தென்கொரியா நாளிதழ் தெரிவித்துள்ளது.