வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் சந்திக்கும் நிகழ்விற்கு பாதுகாப்பு வழங்க கூர்க்கா படை களமிறக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்கா அதிபர் டிரம்ப் – வடகொரிய கொரியா அதிபர் கிம் சந்திப்பு வரும் 12ம் தேதி சிங்கப்பூரில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இதற்காக கேபெல்லா ஹோட்டலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்களும் தங்கள் தனிப்பட்ட பாதுகாவலர்களை அழைத்து வருவார்கள்
இருந்த போதும் சிங்கப்பூர் சார்பாக அவர்களுக்கு கூர்க்கா பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. சுமார் 500க்கும் அதிகமான கூர்க்காக்கள் இன்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.



