December 5, 2025, 5:17 PM
27.9 C
Chennai

ஜூன் 20 – உலக அகதிகள் தினம்

World Refugee Day - 2025இவ்வுலகில் எல்லா நாடுகளிலும் அரசியல், பொருளாதாரம், உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மக்கள் அகதிகளாக வெளியேறுகின்றனர்.எந்த ஒரு நாட்டிலும் உள்நாட்டு குழப்பம் ஏற்படும்போதோ, வன்முறை கும்பல்களால் இனக்கலவரம் ஏற்படும் போதோ முதலில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். இவர்கள் பசி, பட்டினி தாங்க முடியாமல், உயிருக்குப் பயந்து அகதிகளாக அருகில் உள்ள நாடுகளுக்கு இடம்பெயருகின்றனர்.இதையடுத்து ஆப்ரிக்க கண்டத்தில்தான் முதன்முறையாக ஜூன் 20-ம் தேதி உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த 2000-ம் ஆண்டு, டிசம்பர் 4-ம் தேதியன்று ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, பல்வேறு காரணங்களால் இடம்பெயரும் மக்களுக்கு ‘அகதிகள்’ அந்தஸ்து வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்துதான், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20-ம் தேதி சர்வதேச அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.சமீபத்தில் வங்கதேசம், மியான்மரில் நடந்த இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்ற நாடுகளுக்கு அகதிகளாக குடியேற முயன்றபோது, அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க மறுக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.கடந்த 2013-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 8 லட்சம் அகதிகள் கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். இலங்கை, திபெத் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 4.5 லட்சம் மக்கள் அகதிகளாக இந்தியா வந்துள்ளனர்.தவிர பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்தும் அகதிகள் இந்தியா உட்பட பல்வேறு ஆசிய நாடுகளில் இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

இவ்வுலகில் உள்ள 54 நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்கின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுமார் 4.5 லட்சம் இலங்கை மக்கள் அகதிகளாக உள்ளனர்.உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் இலங்கைத் தமிழர்கள் என்று ஐ.நா.வின் சேவை அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது.உலக அளவில், கடந்த ஆண்டு மட்டும் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களின் சொந்த நாடுகளை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட்டிருப்பதாகவும் ஐநா தெரிவித்துள்ளதுஇந்தியாவில் அமைந்துள்ள அகதிகள் முகாம்களில் இலங்கை தமிழர்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது, ஆனால், அவர்களின் உயர்கல்வி, பிரஜா உரிமை போன்ற விஷயங்களில் தேக்க நிலை உள்ளது.

இந்தியாவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் சுமார் ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக 113 முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியிலும் வசித்து வருகின்றனர். இலங்கை தமிழ் அகதிகளின் குழந்தைகள் உயர்நிலைக் கல்வி வரை, மற்ற இந்தியர்களைப் போலவே அரசு செலவில் இலவசமாகப் படித்தாலும், அதற்குமேல் உயர்கல்வியைத் தொடர அவர்களுக்கு பொருளாதார ரீதியில் ஆதரவு கிடைக்காததால், அவர்களுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன.

இது தவிர, இந்தியர்களைத் திருமணம் செய்துகொண்டு, குடும்பம் நடத்தி, குழந்தைகளுடன் இருப்பவர்களுக்கு இந்தியக் குடியுரிமை தரப்படாத நிலை பிரச்னையைத் தோற்றுவிக்கிறது.அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமென்றால், உரிய பயண ஆவணம் கிடைப்பதிலும் பிரச்னை ஏற்படுகிறது. ஆனால், முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு மான்ய உதவித் தொகை மற்றும் ரேஷன் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளை தமிழக அரசு அளித்து வருகிறது. இவ்வாறு இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நிலை குறித்து சர்வதேச குடிபெயர்வு நிறுவனம் (ஐ.ஓ.எம்) சார்பாக, லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் வழக்கறிஞர் ஒருவர் ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

உலகளவில் 2014-ம் ஆண்டு வரை சுமார் 9 கோடி மக்கள் அகதிகளாகவும், நாடோடிகளாகவும் உயிர் வாழ்கின்றனர். இன்றைய காலகட்டத்தில், அதிகளவு அகதிகளை உருவாக்கி வரும் நாடாக சிரியா உள்ளது.ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இருந்தே மொத்த அகதிகளில் 60 சதவிகிதம் பேர் இடம்பெயர்ந்து வருகின்றனர்.மேலும், அதிகளவு அகதிகளை (85%) உள்வாங்கும் நாடுகளாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளே திகழ்கின்றன. இது 10 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட 14 சதவிகிதம் அதிகமாகும்.உலகில் அதிக அகதிகளைத் தோற்றுவிக்கும் நாடாக 32 வருடங்களாக ஆப்கானிஸ்தான் விளங்கி வருகிறது. இதில் 95 சதவிகித ஆப்கான் அகதிகள் ஈரானிலும் பாகிஸ்தானிலும் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இதற்கடுத்து 2-ம் இடத்தில் சோமாலியாவும், 3-ம் இடத்தில் ஈராக்கும், 4-வது இடத்தில் சிரியாவும் கடந்த 2013-ம் ஆண்டில் இடம்பிடித்துள்ளன.அதே வேளையில், 2014-ம் ஆண்டு இறுதிக்குள் இன்னும் 3 கோடி மக்கள் சிரியா மற்றும் உள்நாட்டு கலவரங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்திருக்கலாம்.இவர்களில் கணிசமானோர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்திருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.ஒவ்வொரு முறை நாம் கண் சிமிட்டும் போதும் அதாவது, 5 நொடிகளுக்கு ஒருமுறை ஒரு அகதி தற்போது உருவாகி வருவதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories