ஃபிபா உலகக் கோப்பை பரிசு வழங்கும் விழாவில் ரஷ்யா அதிபர் புதினுக்கு மட்டுமே குடை பிடிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ரஷ்யாவில் கடந்த மாதம் 14-ந் தேதி முதல் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. நேற்றைய இறுதிப் போட்டியில் குரேசியாவை பிரான்ஸ் வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது.
இதனைத் தொடர்ந்து உலகக் கோப்பை பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ரஷ்யா அதிபர் புதின், குரேசியா அதிபர் கோலிண்டா மற்றும் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது மழை பெய்ததால் ரஷ்யாவின் அதிபர் புதினுக்கு மட்டும் அதிகாரிகள் குடை பிடித்தனர். பிரான்ஸ் மற்றும் குரேசியா அதிபர்கள் மழையில் சில நிமிடங்கள் நனைந்தனர்.
இச்சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.



