பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் குவெட்டா நகர வாக்குச்சாவடியில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியாகி உள்ளனர் என்றும் காயமடைந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் இன்று காலை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
272 இடங்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் 3,459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்புடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 மாகாண சட்டசபை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லஷ்கர்-இ-தெய்பா தீவிரவாத அமைப்பின் தலைவரும், மும்பை 26/11 குண்டுவெடிப்பு தாக்குதலின் முக்கிய குற்றவாளியுமான பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சையது தனது வாக்கைப் பதிவு செய்தார்.
நாடு முழுவதும் 3,71,388 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்வா, பலுசிஸ்தான் மாநில பேரவைகளுக்கும் தேர்தல் நடக்கிறது
இன்றிரவே பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார் என்பது தெரிய வாய்ப்புள்ளது



