
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று கடற்கரை – திருமால்பூர் ரயில் சுற்றுச் சுவரில் மோதி படியில் தொங்கிக் கொண்டு வந்த சிலர் கீழே விழுந்தனர். அவர்களில் 4 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.
இதில் உயிரிழந்த சிவகுமார், நவீன்குமார், பரத் ஆகிய 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த 4வது நபர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சித்தரசரூர் வேல்முருகன் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



