ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் தனது 80 ஆவது வயதில் சனிக்கிழமை இன்று காலமானார்.
ஐ.நா.சபை பொதுச் செயலாளர் பதவியில் 1997 முதல் 2006ம் ஆண்டு வரை இருந்தார் கோபி அன்னான். ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஐநா சபையின் உயரிய பொறுப்பினை வகித்தது அதுவே முதல் முறை!
இந்நிலையில், கோபி அன்னான் உடல் நலக் குறைவால் இன்று காலமானதாக, அவரின் அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப் பட்டிருந்தது. அந்தப் பதிவில்…
It is with immense sadness that the Annan family and the Kofi Annan Foundation announce that Kofi Annan, former Secretary General of the United Nations and Nobel Peace Laureate, passed away peacefully on Saturday 18th August after a short illness… pic.twitter.com/42nGOxmcPZ
— Kofi Annan (@KofiAnnan) August 18, 2018
ஆப்பிரிக்க நாடான கானா நாட்டைச் சேர்ந்த கோபி அன்னான், படிப்படியாக உயர்ந்து, ஐ.நா., சபையில் ஏழாவது பொதுச் செயலாளராக பதவி வகித்தார். தன் பதவிக் காலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதால், அவருக்கு 2001ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அவரின் பதவிக்காலம் முடிந்த பின்னரும் சிரியா போர் குறித்து ஆய்வு செய்து பல முக்கியமான முடிவுகளை எடுக்க உதவினார்.
கோபி அன்னான் மறைவுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், குறிப்பிட்டுள்ளது…
We express our profound sorrow at the passing away of Nobel Laureate and former UNSG Mr. Kofi Annan. The world has lost not only a great African diplomat and humanitarian but also a conscience keeper of international peace and security.
— Narendra Modi (@narendramodi) August 18, 2018




