கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி! தண்டனையை எதிர்நோக்கி!

இந்தச் சம்பவத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

thailand house in sea

தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப் படுகிறது.

தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த சாட் எல்வர்டோஸ்கி மற்றும் சுப்ரானே தெப்பெட் இருவரும் பிட் காயினில் முதலீடு செய்து கோடிக் கணக்கில் லாபம் ஈட்டியுள்ளனர். தங்களுக்குக் கிடைத்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் பொருட்டு தாய்லாந்தில் கடலுக்குள் கான்கிரீட் வீடு கட்டியுள்ளனர்.

கடற்கரையில் இருந்து 12 நாட்டிங் கல் தொலைவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. ஆனால், உரிய அனுமதியைப் பெறாமல் தாய்லாந்து நாட்டின் இறையான்மையை மீறி கடலுக்குள் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு, கடலுக்குள் வீடு கட்டிக் குடியேறி இப்போது மரண தண்டனையை எதிர்நோக்கி அவர்கள் இருப்பது பெரும் பச்சாதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.