ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த ‘அறிவுரை’!

Published:

06 July17 Supreme Court - 2026

உச்ச நீதிமன்ற நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஊடகங்களுக்கு சில அறிவுரைகள் கொடுத்திருக்கிறது.

இந்தப் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்த போது, உச்ச நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் தகுந்த முறையில் நடத்தப்படுகின்றனர்; பாலியல் புகார் கூறும் பெண் ஒன்றரை மாதம் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் பணியாற்றினார்.  அப்போதே இந்தப் புகார் வந்தது; இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வது அவசியமில்லை என்று கருதினேன்… எனக் கூறியுள்ளார்.

அடுத்த வாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கு, மோடியின் வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படம், தமிழக தேர்தலில் நடந்த பணப் பட்டுவாடா ஆகிய முக்கிய வழக்குகளை விசாரிக்க உள்ளார்! இந்த நிலையில் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார் ஒரு பெண் ஊழியர்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இந்த விவகாரத்தில் மேலும் கூறிய போது, நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை. இதனை வெளியிட தடையும் இல்லை. ஆனால் ஆதாரமற்ற புகாரை வெளியிடலாமா என்ற பொறுப்புணர்வோடு ஊடகங்கள் செயல்படுங்கள் .. என்று அறிவுரை கூறியிருக்கிறது.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

Related articles

Recent articles

spot_img