பிழைப்பிற்காக துபாய் சென்ற வாலிபன் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தி சடலத்தை கொண்டு வர வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியரிடம் அந்த இளைஞரின் குடும்பத்தார் கண்ணீர் மல்க மனு அளித்தனர். கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த தோகைமலை ஒன்றியம் பகுதியில் அமைந்துள்ளது வேங்கடத்தான் பட்டி கிராமம். இங்கு வசிக்கும் அம்மாக்கண்ணு இந்த பெண்மணியின் 5 வது மகன் பி.வெங்கடாசலம் , கடந்த பிப்ரவரி மாதம் 3 ம் தேதி பிழைப்பிற்காக துபாய் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 11 ம் தேதி சாமி என்பவரிடம் இருந்து வேங்கடத்தான் பட்டியில் வசிக்கும் வெங்கடாசலத்தின் அக்கா கணவர் வரதராஜனிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். சாலை விபத்தில் தங்களுடைய மைத்துனர் கவலைக்கிடமாக உள்ளார் எனவும், பின்பு அன்றே மாலை 4 மணிக்கு அவர் இறந்து விட்டதாக கூறி உள்ளார். இதை அடுத்து கரூர் மாவட்ட ஆட்சியரிடம் வெங்கடாசலத்தின் தாயார் அம்மாக்கண்ணு கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார். அந்த மனுவில் துபாய்க்கு வேலைக்கு சென்ற எனது மகன் சாவில் மர்மம் உள்ளதாகவும், அவனது உடலை மீட்டு என்னிடம் ஒப்படைக்குமாறு மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
பிழைப்பிற்காக துபாய் சென்ற வாலிபர் மர்ம சாவு: உடலை மீட்க ஆட்சியரிடம் குடும்பத்தார் மனு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari