நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்து புகழ் பெற்ற சுற்றுலா தலமான குற்றாலம் அமைந்துள்ளது. இங்கு தற்போது ஐயப்ப சீசன் நிறைவடையும் நிலையில் உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக குற்றாலம் கோவில் நிர்வாகம் சார்பில் நூற்றுக்கனக்கான கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது.
இந்த கடைகளில் மூலிகை பொருட்கள், சிப்ஸ் என சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பல்வேறு பொருட்களை வியபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர் இந்நிலையில் இன்று அதிகாலையில் குற்றாலநாதர் கோவில் அருகே உள்ள வடக்கு சன்னதி பஜாரில் உள்ள கடை ஒன்றில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்த தென்காசி, செங்கோட்டை தீயனைப்புத்துறையினர் விரைந்து வந்தனர் குற்றாலம் கடைத்தெருவிற்கு வரும் வழியில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் இரும்பிலான கதவு அமைக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது. இதனால் தீயனைப்பு வாகனங்கள் வடக்கு சன்னதிக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த தாமதத்தால் ஒரு கடைகளில் பிடித்த தீ அருகில் உள்ள 3 கடைகளில் தீ பரவ தொடங்கியது. இதனை தொடர்ந்து விரைந்து வந்த தீயனைப்புத்துறையினர் மற்றும் குற்றாலம் காவல்துறையினர் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
குடியிருப்பை சேர்ந்த குத்தாலிங்கம், லெட்சுமணன், மேலகரத்தை கதிரேசன் என்பவரதும் ஆகியோரின் கடைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சுமார் 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக வியாபரிpகள் தெரிவித்தனர்
தற்போது சீசன் முடியும் தருவாயில் உள்ளதால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் மேலும் பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது



