அழகிய இலங்கையை உருக்குலைத்த இஸ்லாமிய அடிப்படைவாதம்!

உரத்த சிந்தனை உலகம் கட்டுரைகள்

isis srilanka - 2026இஸ்லாமிய நாடுகள் ஶ்ரீலங்காவில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய 8 நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

ஆனால்.. ஐஎஸ் மூலம் மௌத்பீஸ் அமாக் செய்தி நிறுவனம் 7 பெயர்களை வெளியிட்டுள்ளது

அந்த குறிப்பின்படி… அவர்களின் பெயர்கள் அபு உபைதா, அபு அல் முக்தார், அபு காலில், அபு ஹம்ஸா, அபு அல் பாரா ஆ, அபு மோஹமத், மற்றும் அபு அப்துல்லா என்பது அவர்களின் பெயர்கள்.

இதில் அந்த படங்களில் உள்ள 7 பேரும் தங்கள் முகங்களை மறைத்திருக்க ஒருவர் (தலைவன்?) மட்டும் தன் முகத்தை மறைக்காமல் இருக்கிறார்..!

அபு ஹம்ஸா என்பவன் தன்னுடைய சட்டையில் இருந்த வெடிப் பொருளை கொழும்புவில் உள்ள செயிண்ட் ஆண்டனி சர்சில் வெடிக்கச் செய்தான்.

அபு காலில் நெகோம்போவில் உள்ள செபஸ்டியன் சர்ச்சில் தன்னையே வெடிக்க வைத்துக் கொண்டான். சர்ச்சை நெருங்கும் போது அமைதியாக ஒரு பெண் குழந்தையின் கன்னத்தைத் தட்டிவிட்டுப் போகும் இவனது வீடியோ நேற்று வெளியானது.

அபு மொஹமத் ஸியான் சர்ச்சில் தன்னையே வெடிக்க வைத்துத் தாக்கினான்.

அபு உபைடா, அபு அல் முக்தார், அபு அல் பாரா ஆ, மற்றும் அபு அப்துல்லா இவர்கள் அனைவரும் ஆடம்பர ஹோட்டல்களான Shangri-La, Cinnamon Grand, Kingsbury போன்றவைகளைத் தாக்கினர். இவர்களில் இருவர் ஶ்ரீலங்காவில் உள்ள பணக்கார மிளகு, கிராம்பு, ஏலக்காய் போன்ற பொருள்களை விற்கும் வியாபாரக் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.