இலங்கை வெடிகுண்டு தொடர்பில், தவறுதலாக தனது படத்தை வெளியிட்டுள்ளதாக அமெரிக்க எழுத்தாளர் அமரா மஜீத் தனது டிவிட்டர் பதிவில் தெரிவிக்க, அதற்காக மறுப்பு தெரிவித்து இலங்கை போலீசார் அறிக்கை அளித்துள்ளனர்.
இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் என 9 பேரின் படங்களை இலங்கை அரசு வெளியிட்டது. இவ்வாறு வெளியிடப்பட்ட 9 பேர் புகைப்படங்களில் அமாரா மஜீத் என்ற அமெரிக்க எழுத்தாளரின் படம் தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக இப்போது அரசு விளக்கம் அளித்துள்ளது.
நேற்று இலங்கை அரசு, குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் குறித்த படங்களை வெளியிட்டது. இதில், தனது படம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் அமாரா மஜீத் என்பவர். இவர் அமெரிக்க எழுத்தாளர். இவர் உடனே தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த முட்டாள்தனத்தை நிறுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தைச் சேர்ந்த நிலையில், இதுபோன்ற செயல்கள் மேலும் பிரச்னைக்கு உள்ளாக்கும் என்று கூறிய அவர், இலங்கை அரசு இதனை உடனே நிறுத்தவேண்டும் என்று கூறியிருந்தார்.
Hello everyone! I have this morning been FALSELY identified by the Sri Lankan government as one of the ISIS terrorists that have committed the Easter attacks in Sri Lanka. What a thing to wake up to! (1/1)#SriLankaAttack #SriLanka #SriLankaBlasts
— Amara Majeed (@AmaraMajeed1) April 25, 2019
இந்நிலையில், இலங்கை அரசால் வெளியிடப்பட்ட 9 பேர் புகைப்படங்களில் அமாரா மஜீத் என்ற அமெரிக்க எழுத்தாளரின் படம் தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட, தேடப்படும் நபர்களில் பாத்திமா காதியா என்ற பெண்ணின் பெயரில் அமாரா மஜீத் என்பவரது படம் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் அறிவித்துள்ளனர்.
ஆனால் இவரது டிவிட்டர் கணக்கு ஏப்ரல் 2019ல், அதாவது தற்போதுதான் தொடங்கப்பட்டிருப்பது என்பதும், அதற்குள் 600க்கும் மேற்பட்டோர் பாலோ செய்வதும், வெறும் 4 டிவிட்கள், அதுவும் தன்னை சம்பந்தப் படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கை அரசு வெளியிட்டதாகக் கூறப்படும் தகவலை மட்டும் பதிவு செய்திருப்பதும், இவர் குறித்த தகவலில் மேலும் சந்தேகத்தையே எழுப்பியுள்ளது.





