இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய மதகுரு ஜக்ரான் ஹாஸிம், தற்கொலைப் படையாக செயல்பட்டு, உயிரிழந்திருப்பதாக இலங்கை அதிபர் சிறிசேன உறுதி செய்தார்.
இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் என்று, இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில், இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு தலைமையேற்று நடத்திய மொஹம்மது ஜஹ்ரான் ஹாஸிம் உயிரிழந்துவிட்டார். கொழும்புவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார் என்று இலங்கை பாதுகாப்புத்துறை தகவல் கொடுத்துள்ளது.
இந்தத் தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் முகமது ஜஹ்ரான். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் 130 முதல் 140 பேர் வரை இலங்கையில் இருக்கிறார்கள்.
தற்போது வரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்! விரைவில் அனைவரும் கைது செய்யப் படுவார்கள் என கூறினார் ஜனாதிபதி சிறீசேன.




