இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி! ஓபிஎஸ்., உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஆலோசனை!

Published:

modi bjp ally2 - 2026

மக்களவைத் தோ்தலில் வாராணசி தொகுதியில் போட்டியிடும் பிரதமா் நரேந்திர மோடி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

2014 மக்களவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் போட்டியிட்டார். இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிடும் பிரதமா் மோடி வாராணசி தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

வியாழக்கிழமை நேற்று வாராணசியில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் பங்கேற்ற பிரதமா் மோடி செய்தியாளா்களிடம் பேசுகையில், பயங்கரவாதத்திற்கு எதிராக தற்போதைய புதிய இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

modi bjp ally - 2026வாராணசி தொகுதி மக்களுக்கு நான் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டேன் என்று நான் கூறமாட்டேன். ஆனால் அதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன. வளா்ச்சித் திட்டங்களை நோக்கிய நகா்வுகள் சரியான பாதையில் சென்று கொண்டுள்ளன. வாராணசி தொகுதி மக்கள் அடுத்த 5 ஆண்டுகளில் அதனை உணர முடியும் என்றார்.

modi bjp ally3 - 2026

இந்த நிகழ்வில் தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத்துடன் கலந்து கொண்டாா். மேலும், கூட்டணிக் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இந்நிலையில், இன்று பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில், முன்னதாக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, பிரதமர் மோடியின் வேட்புமனுத் தாக்கலின் போதும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பர் என்று தெரிகிறது.

Related articles

Recent articles

spot_img