இலங்கை அதிபரின் ஃபேஸ்புக் பேஸ் ஹேக் செய்யப் பட்டதா?!

உலகம் லைஃப் ஸ்டைல்

maithripala sirisena - 2026

இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேனவின் அதிகாரபூர்வ பேஸ்புக் சமூக வலைதளக் கணக்கு முடக்கப்பட்டு நேரலையாக காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டுள்ளது.

ஐந்து நிமிடங்களுக்கு வாகனப் போக்குவரத்து தொடர்பான காட்சி ஒன்றே ஒளிபரப்பப்பட்டதாக அதனைப் பார்வையிட்டவர்கள் கூறியுள்ளனர்.

இலங்கை அதிபரின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில், திடீரென நேரலை காணொளி ஒன்று பதிவேற்றம் செய்யப் பட்டது குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

பேஸ்புக் கணக்கை முடக்கி நுழைந்த யாரேனும் இந்த பதிவை இட்டனரா அல்லது, சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவினால் தவறுதலாக இந்த பதிவேற்றம் நிகழ்ந்ததா என்று சம்பந்தப்பட்ட தரப்பினரே விசாரிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.