ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கலைகட்டி வருகிறது.
இதில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 14வது லீக் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியாவுடன் மோதியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது.
இதனை தொடர்ந்து கடின இலக்குடன் களமறிங்கிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டைகளையும் இழந்து 316 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதன்மூலம் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
ஷிகர் தவான் சதம் விளாசி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். இதன் மூலம் உலகக்கோப்பையில் இந்திய வீரர்கள் பதிவு செய்யும் 27வது சதம் இதுவாகும்.
உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சதம் விளாசிய அணி என்ற பெருமையை இந்தியா தட்டிச் சென்றுள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர்கள் 26 சதங்கள் மட்டுமே விளாசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



