படம் பாக்க முடியலியே..! பித்து பிடித்த நிலையில்… பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாக்ராம் பயனர்கள்!

Published:

01 July25 Social media - 2026

உலகம் முழுவதும் கடந்த சில மணி நேரங்களாக வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் படங்களை பார்க்க முடியாத பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பயனர்கள், பித்துப் பிடித்த நிலையில் தவித்தனர்.

சமூக வலை தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாக்ராம் உள்ளிட்டவற்றில், புகைப்படங்களை டவுன்லோடு செய்வதிலும், பார்ப்பதிலும் இன்று (ஜூலை 3) மாலை முதல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போட்டோக்கள், வீடியோக்கள் என எதையும் டவுன்லோடு செய்ய முடியாததால், அதனை பயன்படுத்துபவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

ஏற்கெனவே பதிவான சில பழைய படங்கள் தெரிந்தாலும், மாலை நேரத்துக்குப் பின்னர் படங்களின் தம்ப்நெய்ல் அதாவது படங்களின் சிறு வடிவம் மற்றும் படங்கள் பார்க்க முடியவில்லை என்று பலரும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

உலகம் முழுவதும் நொடிக்கு நொடி ஆயிரக்கணக்கான கோடி பேர் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்வற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சமூக வலை தளங்கள் ஒரு நிமிடம் வேலை செய்யவில்லை என்றால் கூட உலகமே ஸ்தம்பித்துவிடும். அந்த அளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவை இரண்டற கலந்துவிட்டன.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

இந்நிலையில் உலகம் முழுவதும் பல நாடுகளில் சமூகவலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட பல தளங்களில் சரியாக இயங்காமல் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், மற்றும் பேஸ்புக்கின் அக்குலஸ் விஆர் போன்ற தளங்களில் இந்த பிரச்சினை தற்போது நிலவி வருகிறது. இதனால் புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை பதிவிறக்கம் செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img