வைரலாகும் படம்..! முதலையை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு!

Published:

snake crocodile - 2026

ஆஸ்திரேலியாவில், ஆலிவ் வகை மலைப்பாம்பு ஒன்று, பெரிய அளவிலான முதலையை கடித்து விழுங்கும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்த் பகுதியில் உள்ள இஸா மலையில், மார்டின் முல்லர் என்பவர், வனவிலங்குகளைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது இந்த அரிய வகை காட்சியைப் பதிவு செய்துள்ளார்.

snake crocodile1 - 2026மேற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் அதிகளவு காணப்படுகிறது ஆலிவ் வகை மலைப்பாம்பு. இது, நீர்நிலை ஓரம் படுத்திருந்த முதலை ஒன்றை, சத்தமின்றி நகர்ந்து வந்து சுற்றுவளைக்கிறது.

snake crocodile2 - 2026பின்னர், முதலையின் உடலை இறுக்கி அதன் எலும்புகளை நொறுக்கி விட்டு, சகதியோடு அதனை அப்படியே வாய்க்குள் விழுங்குகிறது.

snake crocodile3 - 2026இந்தக் காட்சிகளை தைரியமாகப் படம் பிடித்த மார்டின் முல்லர், இவ்வகை மலைப்பாம்புகள் 13 அடி நீளம் வரை வளரக்கூடியது என்றும், மனிதர்கள், மான்கள் என எதையும் விழுங்கும் அளவிற்கு அதன் தாடைகள் ரப்பர் போல் நெகிழும் தன்மையுடன் திகழ்வதாகவும் கூறுகிறார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Related articles

Recent articles

spot_img