காஷ்மீர் விவகாரம் – ஐநாவில் நாளை விவாதம்

உலகம் சற்றுமுன்

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஐ.நா.சபையில் பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடி விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை இந்தியா ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தியாவின் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி ஐ.நாவின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது.

காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க, ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை உடனே கூட்டும்படி பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி கடிதம் எழுதியுள்ளார்.

இதனிடையே, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு ரஷியாவும் சீனாவும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், பாகிஸ்தானின் கோரிக்கை ஏற்றுக்கொண்ட ஐநா, நாளை பாதுகாப்பு கவுன்சில் கூடி விவாதிக்கும் என தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், காஷ்மீரில் நிலவும் மனித உரிமை தொடர்பான செயல்பாடுகளும் விவாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.