மாமியார் மூக்கும் காதும் ரத்தவெள்ளத்தில்..! வரதட்சணை கொடுமை !

அடடே... அப்படியா? இந்தியா கிரைம் நியூஸ் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
dowry 3 - 2026

மகளை கொடுமைபடுத்திய மருமகனை கேள்வி கேட்ட மாமியார் மீது ஆத்திரமடைந்த மருமகன், மாமியார் மூக்கை கடித்துவிட்டார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நகட்டியா என்ற பகுதியில் கந்த ரகுமான் வசித்து வருகிறார். இவருக்கு குல்ஷான் என்ற மனைவியும் சாந்த்பி என்ற மகளும் உள்ளன்ர். முகமது அஷ்பாக் என்பவரை தன் மகளுக்கு ஒரு வருஷத்துக்கு முன்பு கல்யாணம் செய்து வைத்தார். மணமகனுக்கு ரகுமான் 10 லட்சம் ரூபாயை வரதட்சணையாகவும் தந்திருந்தார்.

ஒரு வருடம் கழித்து முகமது, மனைவியிடம் திரும்பவும் வரதட்சணை வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு மனைவி மறுப்பு சொல்லி உள்ளார். ஆனால் ரூ. 5 லட்சம் மேற்கொண்டு வரதட்சணை பணம் வந்தாக வேண்டும் என்று கராராக முகமது மனைவியிடம் கூறியுள்ளார். ஆயினும் மனைவி கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முகமது, மனைவியை அடித்து துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி உள்ளார்.

dowry 1 2 - 2026

மகளை, மருமகன் அடித்து கொடுமைப்படுத்துகிறார் என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரகுமான், மனைவி, குல்ஷானுடன் மகள் வீட்டுக்கு விரைந்து வந்தார். அப்போது இருவீட்டாரும் வரதட்சணை பற்றி பேச, அது ஒரு விவகார விவாதமாக மாறியது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக நடந்த சண்டை, மருமகனின் கடுமையான கோபத்தால் எல்லை மீறியது, மருமகன் முகமது தன்னுடைய மாமியார் குல்ஷானின் மூக்கை கடித்தார். முகமதுவின் அப்பாவோ, குல்ஷானின் காதை கத்தியால் வெட்டிவிட்டார். மருமகன் மூக்கை கடிக்க.. சம்பந்தி காதை வெட்ட.. என ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்தார் குல்ஷான்.

இதை பார்த்து பயந்து போன முகமதுவும், அவரது அப்பாவும், அங்கிருந்து தப்பி சென்றனர். குல்ஷானை பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தகவல் அறிந்து வந்த பரேலி காவல்நிலைய காவலர், இஷார் மற்றும் அவரது மகன் முகமது அஷ்பாக் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர் , குற்றவாளிகளை தேடி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.