
டெல்லி கலவரத்தை அடுத்து…உடனடியாக.. கலவரத்தை தூண்டும் வகையில் வெறுப்பு பேச்சுகளை பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும், தீர்ப்பாளர் முரளிதர் அவசரமாக , ஒரு பக்க பேச்சாளர்களை மட்டும் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்க சொன்னதும் நினைவிருக்கலாம்.
இவ் வழக்கை தாக்கல் செய்தவர் Harsh Mander. முன்னாள் அதிகாரி. வழக்கமான pesudo liberal வகையாறாக்களில் ஒருவர். இவர் பேசிய வெறுப்பு பேச்சு உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கு வந்ததை அடுத்து …அதன் மீது விளக்கம் கேட்டு இவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது…உச்சநீதிமன்றம்.
இதையடுத்து உலக அளவிலான பல தொடர்புகள் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்திருக்கிறது.
அவ்வாறு இணையக் கூடிய புள்ளிகள்: இந்த Harsh Mander…அமெரிக்க Democrat கட்சியை சேர்ந்த George Soros என்கிற billionaire-ன் NGO-வான OpenSocietyFoundations ல் board member.

இந்த George Soros..அரசியல் ரீதியாக இடதுசாரி ஆதரவு போன்ற தோற்றத்தில்..pesudo liberal களை பயன்படுத்தி முன்னேறும் ஆகப் பெரிய கார்ப்பரேட் பண முதலைகளில் ஒருவர் ! மிகத்தீவிரமான லிபெரலாக காட்டிக் கொள்பவர்.
கடந்த ஜனவரியில்..”The Open Society University Network ”-ல் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக கொட்டி இருக்கிறார்!
உலகளாவிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களை/ பல்கலைக் கழகங்களை இணைக்கும் வகையில் …உயர்கல்வி & ஆராய்ச்சி களுக்கு என்கிற பெயரில் இயங்கப் போகிறது இந்த ”The Open Society University Network” . இம் மாபெரும் நிதியை பயன்படுத்தி…உலகம் முழுவதும் கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோரை …தீவிர liberal-களாக உருவாக்குவதே நோக்கம் என்று வெளிப்படையாக அறிவித்தும் இருக்கிறார்!
இதற்கு அவர் கூறிய காரணம் : உலகளாவிய அளவில் [Nationalist] தேசியவாத கருத்துகளை பேசும் வலதுசாரி ஆட்சியாளர்கள் அதிகமாகிவிட்டனர். இதை முறியடிக்க வேண்டுமானால்…அதற்கான அடிப்படைகளை உலகளவிலான வலைப்பின்னலோடு உருவாக்க வேண்டும்.

வெளிப்படையாகவே…இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக / மோடிக்கு எதிராக ..பலமான திட்டமிடுதலோடு, பெரும் முதலீட்டோடு களம் இறங்கியிருப்பவர்களில் ஒருவர் இந்த George Soros.
உலகின் சர்வாதிகார அரசுகளுக்கு எதிராக , உரிமைகளுக்கானவராக காட்டிக் கொள்ளும் George Soros.. இந்த அரசுகளுக்கு ஆதரவாக facebook செயல்படுகிறது. அதை தடை செய்யவேண்டும் என்று கூறுவது தான் கவனிக்க வேண்டிய இரட்டை நிலை.
பெரும் பணத்தோடு, பெரும் வலைப்பின்னலோடு, அந்தந்த நாட்டில் உள்ளூர் அரசியல் ஆதரவாளர்களோடு ..இடதுசாரி-லிபெரல்-மனித உரிமை- முகமூடி அணிந்த கார்ப்பரேட் பண முதலைகள்..வலையை விரித்து காத்திருக்கின்றன.
டெல்லி கலவரத்திற்கு பின்னான விசாரணை.. இந்த வலைப்பின்னலை.. மிகக் கொஞ்சமாக வெளிக் கொணர்ந்திருக்கிறது… என்பதையே இச் செய்திகள் உணர்த்துகின்றன.
- பானுகோம்ஸ்



