பத்ம விருதுகளை மக்களே தேர்வு செய்யலாம்

இந்தியா சற்றுமுன்

புதுதில்லி:

இனி பத்ம விருதுக்கான தகுதி வாய்ந்த நபர்களை பொதுமக்களே தேர்வு செய்யும் முறையை முதன்முதலாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியால் அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்திய அரசு 1954-ம் ஆண்டிலிருந்து தம் குடிமக்களில் பெரும் சாதனைகள் புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அதுதான் இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது. அதற்கு அடுத்த நிலையிலான விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூசண், பத்மஸ்ரீ ஆகியவை. இவற்றை பத்ம விருதுகள் என்று சொல்வது வழக்கம். மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியை பொறுத்து, அவர்களுக்கு சாதகமான மனிதர்களுக்கே பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருவதாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பத்ம விருதுக்கான தகுதி வாய்ந்த நபர்களை பொதுமக்களே தேர்வு செய்யும் முறையை முதன்முதலாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆன்-லைன் மூலம் தகுதி வாய்ந்த நபர்களை பொதுமக்கள் பத்ம விருதுக்காக பரிந்துரை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பரிந்துரைக்க முன் வருபவர்கள் தங்களது ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே அவர்களது பரிந்துரை ஏற்கப்படும். இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது.,

‘‘கவுரவமிக்க தேசிய விருதுகளை உண்மையான மக்களுக்கான விருதாக மாற்றும் முதல்படிதான் இது. இதனால் தெரிந்தவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்ற செல்வாக்கு படைத்தவர்களின் நெருக்கடிகள் முடிவுக்கு வரும். வெளிப்படைத்தன்மையும் நிலைநாட்டப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கான நபர்களைப் பரிந்துரை செய்வதற்கான கடைசி தேதி வரும் 15-ம் தேதியுடன் நிறைவடையுவுள்ள நிலையில், இதுவரை பொதுமக்களிடம் இருந்து 1,700 பரிந்துரைகள் வந் திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.