விக்ரமுக்கு உயிர் கொடு! பாலத்தின் உச்சியில் நின்று சந்திரனை நோக்கி இவரின் தவம்!

அடடே... அப்படியா? இந்தியா பொது தகவல்கள்
bridge - 2026

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் வரையில் இறங்கமாட்டேன் என உத்திரபிரதேசத்தில் பாலத்தின் மீது பிராத்தனை செய்து வருகிறார் ஒருவர்.

நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவிற்கு 2.1 கிமி தூரத்தில் இருக்கும் போது தகவல் தொடர்பை இழந்தது. ஆனால், விக்ரம் லேண்டர் சேதமடையாமல் சாய்ந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் இருப்பதாக ஆர்ப்பிட்டர் மூலம் தகவல் பெறப்பட்டது.

அன்று முதல் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ பல முயற்சிகளை மேற்கொண்ட நிலையிலும் எதுவும் பயனளிப்பதாக தெரியவில்லை. தற்பொழுது விக்ரம் லேண்டர் தனது இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிகிறது.

isro sattelite - 2026

உத்திரபிரதேசத்தில் யமுனை ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பெரிய பாலத்தின் ராட்சத தூணில் தேசியக்கொடியோடு ஏறி நின்று கொண்டு ஒருவர் வேண்டுதல் நடத்தி வருகிறார். அவரது நோக்கம் என்ன என்று ஒரு காகிதத்தில் எழுதி தூக்கி எறிந்துள்ளார்.

isro chandrayaan2 - 2026

அதில், விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் வரை கீழே இறங்கமாட்டேன். இங்கேயே இருந்து சந்திரக் கடவுளை பிரார்த்தனை செய்வேன். எனது பெயர் ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.