கணவன் கண்ட உண்மை! மனைவி செய்த வன்மை!

புகார் பெட்டி பொது தகவல்கள்
kolai - 2026

காரைக்குடி அருகே உள்ள பெரியார் நகர் சாய் பாபா காலனியை சேர்ந்தவர் மணிமுத்து. 51 வயதாகும் இவர் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5 வருடமாக ஊருக்கு வராத இவர் சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

தன் கணவன் ஊரில் இல்லாத நேரத்தில் அவரது மனைவி பூமி அந்த பகுதியில் குறி சொல்லும் சாமியார் ஒருவருடன் கள்ள தொடர்பில் இருந்துள்ளார். மணிமுத்து ஊருக்கு திரும்பியதும் அவரது உறவினர்கள் மனைவியின் நடத்தை பற்றி அவரிடம் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணிமுத்து தனது மனைவியை அழைத்து கண்டித்துள்ளார். தனது கணவனுக்கு விஷயம் தெரிந்துவிட்டதை உணர்ந்த பூமி சாமியாருடன் சேர்ந்து தனது கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அவரை கொலை செய்துள்ளார்.

பூமிதான் தனது கணவரை கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடித்த காவல்துறை கொலைக்கான காரணம் குறித்து விசாரித்ததில் அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.