பிரதமருடன் பாலிவுட் பிரபலங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

அடடே... அப்படியா? இந்தியா சினி நியூஸ் சினிமா
modi 6 - 2026

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தின கொண்டாட்டம் குறித்து பாலிவுட் பிரபலங்களுடன் டெல்லியில் மோடி கலந்துரையாடினார்.

அப்போது, அமீர்கான், ஷாரூக்கான் என முன்னணி நடிகர்கள் மற்றும் கங்கனா ரனாவத், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட நடிகைகளும் மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

modi 3 - 2026

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக பாலிவுட் நடிகர்கள் மற்றும் பொழுதுபோக்கு துறையினருடன் பிரதமர் மோடி நேற்று இரவு கலந்து ஆலோசனை நடத்தினார். படைப்பாற்றலின் சக்தி மகத்தானது. இந்த படைப்பாற்றல் உணர்வை நம் தேசத்திற்கு பயன்படுத்துவது அவசியம் என்றும். காந்தியின் கொள்கைகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் திரைத்துறை சிறந்த பணியாற்றுவதாகவும் மோடி பாராட்டினார்.

modi 1 1 - 2026

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமீர்கான் மற்றும் ஷாரூக்கானுடன் பிரதமர் மோடி செல்ஃபி எடுத்துக் கொண்டார். நடிகர் அமீர்கான் எடுத்த அந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சல்மான் கான் மற்றும் அக்‌ஷய் குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

modi 5 - 2026

நிகழ்ச்சியில் பேசிய அமீர்கான், மகாத்மா காந்தியின் அறவழி போதனைகளை உலகிற்கு கொண்டு செல்வதில் பிரதமர் மோடி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவிப்பதாக கூறினார். திரைதுறையினராகிய நாம் செய்யக்கூடியவை ஏராளம் உள்ளது. அதை நாங்கள் இன்னும் அதிகமாக செய்வோம் என உறுதியளிக்கிறேன் என்றார். அமீர்கானை தொடர்ந்து பேசிய ஷாரூக்கான், இந்தியாவிற்கும், உலகிற்கும் காந்தியை மீண்டும் நினைவு படுத்தவேண்டிய தருணம் இது என தனது கருத்தைக் கூறினார். எங்கள் அனைவரையும் ஒன்றிணைத்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்,

modi 4 - 2026

பிரதமர் மோடியுடன் ஷாரூக்கான் மற்றும் அமீர்கான் செல்ஃபி எடுத்துக் கொண்டதை தொடர்ந்து பாலிவுட் நடிகைகளான கங்கனா ரனாவத், ஜேக்குலின் ஃபெர்ணாண்டஸ், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட நடிகைகள் ஆர்வமாக மோடியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இந்த விழாவில் எஸ்.பி. பாலசுப்ரமணியம், சோனம் கபூர், ஜாக்கி ஷெராஃப், போனி கபூர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

modi 2 1 - 2026

இது பற்றி பிரதமர் தன் ட்விட்டரில் மகாத்மா காந்தியின் எண்ணங்களை சினிமா மூலம் பரப்புவது அதிகமான இளைஞர்கள் காந்திஜியின் கொள்கைகளை நன்கு அறிந்திருப்பதை உறுதி செய்வது போன்ற விஷயங்களால் முன்னணி திரைப்பட பிரமுகர்கள் மற்றும் கலாச்சார சின்னங்களுடன் இன்றைய தொடர்பு பலன் அளித்தது. அளவிலான பாடங்களில் எண்ணங்களை பரிமாறிக் கொண்டோம் என்று பதிவிட்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.