தேவையற்றதை பேசி பொய்யைப் பரப்பும் பாகிஸ்தான்! இந்தியா பதிலடி!

இந்தியா சற்றுமுன்
india pak - 2026

ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு, பாகிஸ்தான், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக ஐ.நா., உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் தொடர்ந்து பிரச்னை எழுப்பி வருகிறது. இதற்கு, இந்திய அரசும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

காலனியாதிக்க முறைக்கு எதிரான ஐ.நா.,வின் குழுவின் கூட்டம் நடந்து வருகிறது. கடந்த வாரம், இந்தக் கூட்டத்தில் பேசிய, ஐ.நா.,வுக்கான பாகிஸ்தான் தூதர், மலீகா லோதி, ஜம்மு – காஷ்மீர் விவகாரம் குறித்து குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய, ஐ.நா.,வுக்கான இந்தியக் குழுவைச் சேர்ந்த, தீபக் மிஸ்ரா, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது:கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்னை குறித்து பேசாமல், தேவையில்லாத பிரச்னையை பாகிஸ்தான் எழுப்பியுள்ளது.

தன் மோசமான திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, பொய்யான ஒரு விஷயத்தை, கட்டுக்கதையை, பாகிஸ்தான்., தொடர்ந்து பரப்பி வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.