விவசாயிக்கு குரல் கொடுக்கும் விஜய் சேதுபதியா? இதுவும் நடிப்பா…அப்பப்பா!

சினி நியூஸ் சினிமா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் வணிகம்
vijay sethupathi 2 - 2026

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ஆன்லைன் விளம்பரத்திற்கு வணிகர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதி ஹீரோ மட்டுமின்றி ஆன்ட்டி ஹீரோ ரோலிலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அதோடு விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தனியார் ஆன்லைன் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மண்டி என்ற நிறுவனத்தின் அரிசி ஆன்லைன் விற்பனைக்கு ஆதரவாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

vijaysethupathi - 2026

இந்த விளம்பரம் ஒளிபரப்பாக தொடங்கிய போதே சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியை கண்டித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுவதெல்லாம் வெறும் நடிப்பா என்று கேட்டனர் நெட்டிசன்கள்.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் இந்த ஆன்லைன் விளம்பரத்திற்கு தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுகுறு வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு பணம் வாங்கி கொண்டு நடிகர் விஜய் சேதுபதி துணை போவதாக கண்டித்துள்ளது.

vijay sethupathi 1 - 2026

மேலும் விஜய் சேதுபதியின் இந்த நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளது. அதன்படி வரும் நவம்பர் 4-ம் தேதி விஜய் சேதுபதி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.