இந்தியாவுக்கு புதிய கோவில்கள் தேவை இல்லை: கார்த்தி சிதம்பரம்! சிறைகள் தேவை: நெட்டிசன்ஸ்!

அடடே... அப்படியா? இந்தியா பொது தகவல்கள்
karthi chithamparam - 2026

இந்தியாவுக்கு புதியதாக கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்கள் எதுவும் தேவை இல்லை என காங்கிரஸைச் சேர்ந்த சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். அதே நேரம் அவருக்கு பதில் அளிக்கும் வகையில், ஆனால் சிறைகள் தேவை என்று டிவிட்டரில் கருத்துப் பகிரல்களைச் செய்திருக்கின்றனர் நெட்டிசன்ஸ்!

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பில், ஸ்ரீராமஜன்ம பூமி உள்ள 2.77 ஏக்கர் நிலத்தை இந்துக்களிடமே ஒப்படைக்கவும், அங்கு கோவில் கட்ட அனுமதி அளித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதே நேரம், அயோத்தியில் முக்கிய இடத்தில் முஸ்லிம்கள் பாபர் மசூதி கட்டிக் கொள்ள 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துகளைத் தெரிவித்தனர். அது போல், சிவகங்கை மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் தற்போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்தில், இந்தியாவுக்கு புதியதாக கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்கள் எதுவும் தேவை இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

need morejails - 2026

ஏற்கெனவே இருக்கும் வழிபாட்டுத் தலங்களை சீரமைத்து பாதுகாப்பதே போதுமானது என்று கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். சிதம்பரம் தற்போது இருக்கும் சிறையை கார்த்தி குறிப்பிடவில்லை. கார்த்தியே முன்னர் இருந்து தற்போது வெளியில் இருக்கும் நிலையில், சிறையில் இடம் போதாமையால் அதிகாரிகள் தள்ளாடுகின்றனர். எனவே சிறைகளே அதிகம் தேவை என்று கலாய்த்திருக்கின்றனர்.

மேற்கத்திய கழிவறைகளுடன் கூடிய சிறைசாலை வேண்டும் என்றும், மற்றொருவர் இந்தியா மறுசீரமைப்பு, புதுப்பித்தல் மற்றும் பாதுகாப்பைத் தொடங்கியுள்ளது. சிதம்பரம் திஹாரில் இருப்பதில் இது நிரூபணமாகிறது என்றும், ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் மகன்களுக்காக அந்த 5 ஏக்கரில் ஒரு சிறை கட்டப்பட வேண்டும் என்றும் கலாய்த்து வருகிறார்கள்.

1 thought on “இந்தியாவுக்கு புதிய கோவில்கள் தேவை இல்லை: கார்த்தி சிதம்பரம்! சிறைகள் தேவை: நெட்டிசன்ஸ்!”

  1. நகரத்தார் சிவன் கோயில் கட்டினர். நரகர்த்தார் பெயரை கெடுத்த Chidambaram குடும்பம் . திருட்டு குடும்பம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.