நெல்லை, தென்காசி மாவட்ட கிராமங்கள் குறித்து, தமிழக அரசு ஆணை வெளியீடு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்
tenkasi district - 2026

நெல்லை தென்காசி மாவட்டங்களில் செயல்படும் கிராமங்கள் குறித்து தமிழக அரசு ஆணை வெளியிடப் பட்டுள்ளது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, சேரன்மகாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் மற்றும் திசையன்விளை ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கிய திருநெல்வேலி மற்றும் சேரன்மகாதேவி வருவாய் கோட்டங்களுடன் நெல்லை மாவட்டம் இயங்கும்.

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டம் தென்காசி மற்றும் புதிய வருவாய் கோட்டமான சங்கரன்கோவில் ஆகியவற்றுடன் தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே புதூர், திருவேங்கடம் மற்றும் ஆலங்குளம் உள்ளிட்ட 8 தாலுக்காக்களை கொண்டு இயங்கும்.

தென்காசி தாலுகா மறு சீரமைப்பு செய்யப்பட்டு அதில் கடையம் (12 கிராமம்), ஆழ்வார்குறிச்சி 13 கிராமம், கல்லூரணி (11 கிராமம்), தென்காசி 11 கிராமம் என தென்காசி வருவாய் கோட்டத்துடனும்,

தென்காசியுடன் இணைக்கப்பட்ட சங்கரன்கோவில் வருவாய் கோட்டத்தில் சங்கரன்கோவில் (6 கிராமம்), குருக்கள் பட்டி (9 கிராமம்), சேர்ந்தமங்கலம் (5 கிராமம்), கரிவலம்வந்தநல்லூர் (9 கிராமம்) வீரசிகாமணி (6 கிராமம்) என 35 வருவாய் கிராமங்களுடனும் சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் இயங்கும்.

வன்னிகோனேந்தேல் பிர்கா சங்கரன்கோவில் தாலுகாவில் இருந்து பிரிக்கபட்டு நெல்லை மாவட்டத்தில் இயங்கும்.

பிரிக்கப்பட்ட பகுதிகளுக்கான செயல்பாடுகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் தென்காசி மாவட்ட சிறப்பு அதிகாரி ஆகியோர் உடனடியாக மேற்கொள்ள தமிழக அரசு ஆணை பிறப்பித்தது உத்தரவு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.