5 புதிய மாவட்டங்கள்: அரசாணை வெளியீடு! எந்த தாலுகாக்கள் தெரியுமா?

Chief Secretariat - 2026

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.

திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் பிரித்தது தொடர்பாகவும் அதில் இடம்பெறக்கூடிய தாலுகாக்கள் தொடர்பாகவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

ராணிப்பேட்டை மாவட்டம்: ராணிப்பேட்டை, அரக்கோணம் ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாபாத், ஆற்காடு, நெமிலி மற்றும் அரக்கோணம் ஆகியவை புதிய வட்டங்களாக செயல்படும்.

வேலூர் மாவட்டம்: புதிதாக வேலூர், குடியாத்தம் என புதிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, மற்றும் கே.பி.குப்பம் ஆகிய 6 வட்டங்கள் வேலூர் மாவட்டத்தில் அடங்கும். வேலூர் மற்றும் குடியாத்தம் இரண்டும் வருவாய் கோட்டங்களாக உருவாக்கப் பட்டுள்ளன.

வேலூரை பிரித்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் நெல்லையை பிரித்து நெல்லை, தென்காசி என 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.

காஞ்சிபுரம் மாவட்டம்: காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், என 2 வருவாய் கோட்டம், 5 தாலுகாக்கள் வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், குன்றத்தூர் தாலுகாக்கள் காஞ்சிபுரத்தில் வருகின்றன.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

செங்கல்பட்டு மாவட்டம்: செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் என 3 வருவாய் கோட்டங்கள் வருகின்றன. செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், உள்ளிட்ட 8 தாலுகாக்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிறது.

தென்காசி மாவட்டம்: சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே புதூர், திருவேங்கடம், ஆலங்குளம் ஆகிய தாலுகாக்கள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான அரசு ஆணை வெளியீடு *கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தில் இணைக்கப்பட்ட இரண்டு வருவாய் கோட்டங்கள் அதாவது கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் இதில் உள்ளடங்கும் மேலும் 6 தாலுகா அதாவது கள்ளக்குறிச்சி, சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் மற்றும் புதிய தாலுகா கல்வராயன்மலை உருவாக்கபட்டுள்ளன ஆகிய 6 தாலுகாவுடன் புதிய மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் என இரண்டு கோட்டமும், விழுப்புரம், திருவெண்ணைநல்லூர், விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம், செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், வானூர் மரக்காணம் ஆகிய தாலுக்காக்கள் இம்மாவட்டத்தில் உள்ளடங்கியுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம்: திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய இரண்டும் வருவாய் கோட்டங்களாக செயல்படும். திருப்பத்தூர், வாணியம்பாடி, நாற்றாம்பள்ளி மற்றும் ஆம்பூர் ஆகிய 4 இடங்களும் புதிய வட்டங்களாக செயல்படும்.

நெல்லை மாவட்டத்தை பிரித்து நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, சேரன்மகாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், திசையன்விளை ஆகிய தாலுகாக்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories