வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி-48; நிலைநிறுத்தப் பட்டது ரிசாட் 2பிஆர்1

இந்தியா சற்றுமுன் தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
risat 2br1 - 2026

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ் எல் வி சி 48 ராக்கெட். அதன் மூலம் விண்ணில் செலுத்தப் பட்ட ரிசாட் 2 பி ஆர் 1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப் பட்டது.

இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு செயற்கைகோள், அமெரிக்காவின் 6 செயற்கைக்கோள்கள் என வணிக ரீதியிலான 9 செயற்கைக்கோள்களும் இந்த ராக்கெட்டில் வைத்து விண்ணுக்கு அனுப்பப்பட்டன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பூமியை கண்காணிப்பதற்காக ‘ரிசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைக்கோளை தயாரித்து உள்ளது. ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இறுதிக்கட்டப் பணியான ‘கவுண்ட் டவுன்’ செவ்வாய்க்கிழமை நேற்று தொடங்கியது.

இந்த செயற்கைக் கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 3.25க்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.